/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விவசாயிகளை ஏமாற்றாத விஷ வெள்ளரி சாகுபடிவிவசாயிகளை ஏமாற்றாத விஷ வெள்ளரி சாகுபடி
விவசாயிகளை ஏமாற்றாத விஷ வெள்ளரி சாகுபடி
விவசாயிகளை ஏமாற்றாத விஷ வெள்ளரி சாகுபடி
விவசாயிகளை ஏமாற்றாத விஷ வெள்ளரி சாகுபடி
ADDED : பிப் 12, 2024 05:03 AM

எஸ்.புதூர்: எஸ்.புதூரில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு விஷ வெள்ளரி சாகுபடி கை கொடுத்து வருகிறது.
இவ்வொன்றியத்தில் விஷ வெள்ளரி என்ற சிறிய ரக வெள்ளரியை விவசாயிகள் சிலர் சாகுபடி செய்துள்ளனர். இக்காய்களை பக்கத்தில் இருப்பவர்கள் பறித்து விடக்கூடாது என்பதற்காக போலியாக விஷ வெள்ளரி என அழைக்கப்பட்டு நாளடைவில் காய்க்கு அதுவே பெயர் ஆகிப்போனது. ஆனால் உண்மையில் இது ஒரு உணவுக்கான காய் ஆகும். இப்பகுதியில் அறுவடையாகும் விஷ வெள்ளரிகள் வியாபாரிகள் மூலம் திண்டுக்கல் அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சிறியது முதல் பெரியது வரை ஐந்து வகையாக காய்கள் தரம் பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு உணவுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை பயிரிட்ட விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ப நியாயமான விலையும் கிடைக்கிறது.
லட்சுமி, மேல வண்ணாரிருப்பு: 30 சென்ட் நிலத்தில் விதைகளை வாங்கி வந்து விஷ வெள்ளரியை பயிரிட்டோம்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய் பறிப்புக்கு வந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிக் கொள்கிறார்கள். கிலோ ரூ.4 முதல் 45 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றபடி விலை கிடைக்கிறது.
கூலியாட்கள் கிடைக்காததால் நாங்களே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறோம். இப்பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் விஷவெள்ளரி சாகுபடி திருப்தியான விளைச்சலை கொடுக்கிறது என்றார்.