Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஹசீனா பதவிக்கு நெருக்கடி முற்றுகிறது. : வங்க தேச வன்முறைக்கு 79 பேர் பலி

ஹசீனா பதவிக்கு நெருக்கடி முற்றுகிறது. : வங்க தேச வன்முறைக்கு 79 பேர் பலி

ஹசீனா பதவிக்கு நெருக்கடி முற்றுகிறது. : வங்க தேச வன்முறைக்கு 79 பேர் பலி

ஹசீனா பதவிக்கு நெருக்கடி முற்றுகிறது. : வங்க தேச வன்முறைக்கு 79 பேர் பலி

UPDATED : ஆக 04, 2024 08:24 PMADDED : ஆக 04, 2024 06:53 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று (ஆக.,4) நடந்த வன்முறை சம்பவத்தில் 79பேர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் வன்முறை நீடித்தது. இதில் 52 பேர் பலியாயினர். பொது சொத்துக்கள் சேதமடைந்தன.பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us