/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஒப்பந்ததாரர் பதிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு ஒப்பந்ததாரர் பதிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஒப்பந்ததாரர் பதிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஒப்பந்ததாரர் பதிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஒப்பந்ததாரர் பதிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 11, 2024 04:14 AM
சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியத்தில் புதிதாக ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கு கவுன்சிலர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனியம்மாள், (ஊராட்சி) ரத்தினவேல் பங்கேற்றனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அளவில் குடிநீர் வழங்கும் சமுதாய கிணறுகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிவகங்கை அருகே உடைகுளத்தில் உள்ள தனியார் ஆலை கழிவு நீரால் அப்பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் முன் அனுமதியின்றி புதிதாக 14 ஒப்பந்ததாரர்களை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவேஇருந்த 20 ஒப்பந்ததாரர்கள் பணிகளை முழுமையாக செய்யாமல் விட்டுவிட்டதால், கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்கள் அதிகம் இல்லை. இதனால், புதிய ஒப்பந்ததாரர்களை ஏற்றுகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.