ADDED : பிப் 05, 2024 11:48 PM

காரைக்குடி: காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பிரில்லியன்ட் அகாடமி சார்பில், பட்டமளிப்பு விழா நடந்தது.
அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா, ஓ. சிறுவயல் பள்ளி தலைமையாசிரியர் பாரதிதாசன் பட்டங்களை வழங்கி பாராட்டினர். பிரில்லியன்ட் அகாடமி இயக்குனர் நீலாவதி வரவேற்றார். 2023ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் போட்டிகளில் முதலிடம் பிடித்த 70 மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், தனித் திறன்களை வெளிக்கொண்டு வரும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.