ADDED : பிப் 12, 2024 04:59 AM
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி ஆவின் பாலகத்திற்கு தினமும் 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றனர். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு பால் விற்பனை நடக்கிறது. பால் பூத் ஏஜன்ட்கள் மூலம் பால் விற்பனை செய்ததுபோக, எஞ்சிய பாலை நெய், பால்கோவா, ரோஸ்மில்க் உள்ளிட்ட உப பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
தற்போது ஆவின் நிர்வாகம் விற்பனை செய்யும் பால் பாக்கெட் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வயலெட் கலர் பாக்கெட்டில் விற்பனை செய்யும் பால் தரமற்று, புளித்த சுவையுடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை அதிகம் வாங்குகின்றனர். இதனால் ஆரஞ்சு பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வயலெட் பால் விற்பனை குறைந்ததால், முகவர்கள் பால் கொள்முதலை குறைத்துவிட்டனர். இதனால் வயலெட் பால் பாக்கெட் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இது குறித்து பால் பூத் ஏஜன்ட்கள் கூறியதாவது, டிலைட் பால் பாக்கெட் மீது தொடர் புகார் எழுந்துள்ளது. பூத் ஒன்றிற்கு 150 லிட்டர் பால் விற்பனை செய்த நிலையில், 100 லிட்டராக குறைந்துவிட்டது.
முகூர்த்த நாட்களில் அதிகாலையிலேயே பால் விற்பனை ஆவதால், மக்களுக்கு வழங்க முடியாத வகையில் தட்டுப்பாடு ஏற்படுகிறது, என்றனர்.