ADDED : ஜன 03, 2024 06:10 AM

காரைக்குடி: பிரிட்டிஷ் துாதர் அலெக்ஸ் எல்லீஸ் குடும்பத்தினருடன் கானாடுகாத்தான் அரண்மனை மற்றும் ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்புகளை கண்டு ரசித்தார்.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துாதர் அலெக்ஸ் எல்லீஸ். இவர் செட்டிநாடு பகுதிக்கு குடும்பத்தினருடன் நேற்று வந்திருந்தார். கானாடுகாத்தானில் உள்ள பாரம்பரிய கட்டடக்கலைக்கு உதாரணமான ராஜா பேலசை கண்டு ரசித்தார். கட்டடத்தின் தோற்றம் குறித்தும் கட்டடக்கலை உருவானது குறித்தும் கேட்டறிந்து வியந்தார்.
தொடர்ந்து, ஆத்தங்குடி பேலஸ் மற்றும் ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பினை பார்வையிட்டார். மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வழிகாட்டி மணிகண்டன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.