/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறைலஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம்: வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டுகள் சிறை
ADDED : ஜன 31, 2024 01:39 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே கள்ளிப்பட்டைச் சேர்ந்த விவசாயி சங்குநாதன். இவர், 2007ல் உழவர் அடையாள அட்டை மூலம் தன் மகளின் கல்வி உதவித்தொகைக்காக அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்து பெற, ஆலங்குடி வி.ஏ.ஓ., விஸ்வத்தை அணுகினார்.
அவர், 300 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து சங்குநாதன் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை விஸ்வத்திடம் சங்குநாதன் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஸ்வத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விஸ்வத்துக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பளித்தார்.