ADDED : செப் 19, 2025 02:13 AM
தேவகோட்டை: தேவகோட்டை பாரதி தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதி விழா நடந்தது.
துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் சவரிமுத்து அறிக்கை வாசித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், மாங்குடி எம்.எல்,ஏ., பேராசிரியர் கண்மணி, துணைச் செயலர் வக்கீல் மணிபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.