/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமா
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமா
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமா
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமா
ADDED : செப் 19, 2025 02:12 AM
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவிற்கு உலோக பிளேட் வைக்க ரூ.5 ஆயிரம் பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காரைக்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, அவசர சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உள்ளது. எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில், சிகிச்சைக்கு வருபவர்களிடம் உலோக பிளேட் வைப்பதற்கு டாக்டர்கள் சிலர் பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்: காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்ந்தேன். காப்பீட்டு திட்டம் இருக்கிறதா என்று கேட்டனர். இல்லையென்றால் பிளேட் வைக்க ரூ.4 ஆயிரம் வரை செலவாகும் என்றனர். வேறு வழியின்றி ரூ.4 ஆயிரத்து 200 கட்டியதால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: சிகிச்சைக்கு வந்தவர்களிடம் காப்பீட்டு அட்டை இருந்தால் பணம் தேவைப்படாது. காப்பீட்டு அட்டை இல்லையென்றால் பணம் செலவாகும் என்று தான் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் யாரும் பணம் வாங்கவில்லை என்றார்.