ADDED : செப் 19, 2025 02:13 AM
மானாமதுரை: அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் காளீஸ்வரனை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட செயலாளர் பாலையா, மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் அய்யனார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆதிவளவன் பேசினர்.