ADDED : செப் 12, 2025 04:20 AM
மானாமதுரை: சின்ன கண்ணனுார் கிராமத்தில் புதிதாக அருள் தரும் ஐயப்பன் கோயில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமானது.
நேற்று காலை பூர்ணாஹூதி முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.