Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் எப்போது: நிதி ஒதுக்கியும் பணி தொடங்குவதில் மந்தம்

காரைக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் எப்போது: நிதி ஒதுக்கியும் பணி தொடங்குவதில் மந்தம்

காரைக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் எப்போது: நிதி ஒதுக்கியும் பணி தொடங்குவதில் மந்தம்

காரைக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் எப்போது: நிதி ஒதுக்கியும் பணி தொடங்குவதில் மந்தம்

ADDED : செப் 12, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி நகர் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற காரைக்குடி கல்வி நகரமாகவும் விளங்குகிறது.

காரைக்குடி, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆக இருந்தபோது 1928 ஆம் ஆண்டு பேரூராட்சியில் இருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய வார்டுகளின் எண்ணிக்கை 18 ஆகவும் ,மக்கள் தொகை 15 ஆயிரத்து 350 ஆகவும் இருந்தது. 2013ஆம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆக உள்ளது. 36 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் நகராட்சி ஆண்டு வருமானம் ரூ. 37.10 கோடியாக உள்ளது. காரைக்குடியில் ஆவின் நிறுவனம், போக்குவரத்து மண்டல அலுவலகம், பி.எஸ்.என்.எல்., மண்டல அலுவலகம், சிக்ரி, அழகப்பா பல்கலை உள்ளிட்டவை உள்ளன. புதிதாக சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி, டைட்டில் பார்க், மினி ஸ்டேடியம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகிறது. தவிர, அதிக அளவில் சினிமா எடுக்கப்படும் சினிமா நகரமாகவும் விளங்குகிறது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. அதன் அடிப்படையில், கோட்டையூர் மற்றும் கண்டனுார் பேரூராட்சி, சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலூர், தளக்காவூர் ஊராட்சியை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடியின் மக்கள் தொகை 2 லட்சத்தை எட்டுவதோடு, ஆண்டு வருமானம் ரூ.53. 60 கோடியாக உயரும்.

இந்நிலையில், தற்போது காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பூங்காவில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு, நிதியும் ஒதுக்கியது. அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இடம் தேர்வு செய்வதில் சிக்கலா, அல்லது நிதி கிடைப்பதில் சிக்கலா என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். எனவே விரைவில் மாநகராட்சி புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறுகையில்: மாநகராட்சி பழைய கட்டடம் அருகே உள்ள பூங்கா பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.15.80 கோடி நிதியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us