ADDED : ஜூன் 26, 2025 01:18 AM
தேவகோட்டை: திருப்புத்துார் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பழனியப்பன்.45., இவர் தேவகோட்டையில் மகளிர் குழுக்கள், தொண்டு நிறுவனத்திற்கு கடன் வழங்கும் தனியார் வங்கி உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
திருப்புத்துார் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தின் மேல் அறை ஒன்றில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
வெகு நேரமாகியும் பணிக்கு வராததால் நேற்று காலை நண்பர் ஒருவர் அவருடைய அறைக்கு சென்றார். அப்போது அவர் இறந்து கிடந்தார்.
போலீசுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் உதவி மேலாளர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இரவில் படுக்க சென்றவர் மர்மமாக இறந்து கிடந்ததால் பரிசோதனை அறிக்கை வந்தபின் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.