/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம் குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம்
குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம்
குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம்
குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:17 AM

தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் குங்கும காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் ஆனித் திருவிழா 17 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன.
குங்கும காளியம்மன் அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். 9ம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை இழுத்தனர்.
டி.எஸ்.பி. கவுதம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.