/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஜூலை 9ல் வேலை நிறுத்தம் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு ஜூலை 9ல் வேலை நிறுத்தம் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ஜூலை 9ல் வேலை நிறுத்தம் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ஜூலை 9ல் வேலை நிறுத்தம் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ஜூலை 9ல் வேலை நிறுத்தம் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 01:52 AM
சிவகங்கை:கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் ஜூலை 9 ல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயசுந்தரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:
தேசிய குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு, ரயில்வே, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் கூட்டமைப்பு அழைப்பிற்கு ஏற்ப ஜூலை 9 ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சார்பாக அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.