சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் எஸ்.எஸ்.கல்விக் குழும ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் செந்தில்குமார், செயலர் சந்திரசேகர் தலைமை வகித்தனர். எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ.,கல்லூரி முதல்வர் டாக்டர் உமாஆண்டறிக்கை வாசித்தார்.அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,ராம. அருணகிரி பங்கேற்றார்.
கடந்தாண்டு 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார்.