/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை
அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை
அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை
அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை
ADDED : செப் 24, 2025 02:53 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்த பக்தரின் தங்க நகை திருடு போன வழக்கில் போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, ஜூன் 28ல் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ , அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அஜித்குமாரை போலீசார் தாக்கியதை அலைபேசியில் படம் பிடித்த கோயில் ஊழியர் சக்தீஷ்வரன், அஜித்குமார் நண்பர் ஆட்டோ டிரைவர் அருண், சகோதரர் நவீன்குமார் உள்ளிட்ட30க்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக உள்ளனர்.அஜித்குமார் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் 2018ன் கீழ் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து சக்தீஷ்வரன், நவீன்குமார், அருண் ஆகியோர் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள், லென்ஸ் மற்றும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. திருப்புவனம் போலீசார் சார்பாக இவை அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து மற்ற சாட்சிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.