/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மதுரை கூரியர் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது மதுரை கூரியர் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது
மதுரை கூரியர் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது
மதுரை கூரியர் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது
மதுரை கூரியர் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது
ADDED : செப் 24, 2025 02:43 AM

காரைக்குடி:காரைக்குடியில் கூரியர் வேனில் கடத்தப்பட்டது உட்பட 4.9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல், பள்ளத்துார், கண்டனுார் பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. சில அரிசி ஆலைகளுக்கு தினமும் பல்வேறு வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி வருவதாக புகார் வந்தது. காரைக்குடி புதிய ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா தலைமையில் வாகன சோதனை நடந்தது.
செட்டிநாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருப்புத்துார் பகுதியில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததோடு டிரைவர் நாகராஜை 28 கைது செய்தனர்.
ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டி வந்த ரேவதி 36 என்பவரை போலீசார் கைது செய்தனர். காளையார் கோவிலில் இருந்து வேனில் எடுத்து வரப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து டிரைவர் செல்லப்பாண்டியை 37, கைது செய்தனர்.
நேற்று அதிகாலை, மதுரையில் இருந்து கூரியர் என்று எழுதி சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேல அனுப்பானடி சந்தோஷ் 19 என்பவரையும் கைது செய்தனர். ஒரே நாளில், பல்வேறு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 4.90 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.