Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

ADDED : செப் 24, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை :சிவகங்கை அருகே மாடக்கோட்டையில் போலீஸ் ரோந்தின் போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை தாலுகா போலீசார் மாடக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆளில்லாத பழைய கட்டடத்தில் 3 பேர் பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 பேர் தப்பிக்க முயற்சித்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில் கீழக்குளம் தவம் என்ற முத்துராமலிங்கம் 40, கீழவாணியங்குடி மணிஷ் 20, கரும்பாவூர் பாண்டிசெல்வம் 23 என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

தப்பிக்க முயன்ற பாண்டிசெல்வத்திற்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. போலீசார் பாண்டிசெல்வத்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us