/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/108 ஆம்புலன்ஸ் மூலம்19.19 லட்சம் பேர் பயன்108 ஆம்புலன்ஸ் மூலம்19.19 லட்சம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம்19.19 லட்சம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம்19.19 லட்சம் பேர் பயன்
108 ஆம்புலன்ஸ் மூலம்19.19 லட்சம் பேர் பயன்
ADDED : ஜன 11, 2024 04:09 AM

சிவகங்கை, : தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 19.19 லட்சம் பேர் கடந்த ஆண்டு பயன்அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் எம்.ஆர்.ஐ., சிரீன் ெஹல்த் சர்வீஸ் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 53 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டில்மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 431 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 4 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 509 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 412 பேரும் பயனடைந்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சாலை விபத்து, உடல்நிலை குறைவு, பிரசவம், இதயநோய், தீ விபத்து, விலங்குகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக 19 லட்சத்து 19 ஆயிரத்து 504 பேர் கடந்த ஆண்டு பயனடைந்துஉள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி சோமநாதன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 32 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. 150 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் மூலம் விபத்தில் சிக்கிய ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர், என்றார்.