சீரமைக்கப்படாத கோயில் தெப்பக்குளம்
சீரமைக்கப்படாத கோயில் தெப்பக்குளம்
சீரமைக்கப்படாத கோயில் தெப்பக்குளம்
ADDED : மார் 14, 2025 07:18 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படாததால் தண்ணீர் மாசுபடுகிறது.
சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் பழமையானது. இங்குள்ள தண்ணீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த வரலாறு உண்டு. சில வருடங்களாக இக்குளம் கவனிப்பாரின்றி பாசி படர்ந்து தண்ணீர் மாசுபட்டுள்ளது. குளக்கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து பாம்புகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாரம்பரியமான குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.