/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எதிர்பார்ப்பு : காரைக்குடி- = - மதுரை ரயில்வே பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என எதிர்பார்ப்பு : காரைக்குடி- = - மதுரை ரயில்வே பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என
எதிர்பார்ப்பு : காரைக்குடி- = - மதுரை ரயில்வே பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என
எதிர்பார்ப்பு : காரைக்குடி- = - மதுரை ரயில்வே பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என
எதிர்பார்ப்பு : காரைக்குடி- = - மதுரை ரயில்வே பாதை திட்டம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என
ADDED : மார் 14, 2025 07:19 AM

காரைக்குடி: காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காரைக்குடி மதுரை ரயில் வழித்தட திட்டம் ஆய்வு பணியோடு நின்றதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய நகரமான காரைக்குடியில் 1930 ல் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கப்பட்டது. திருச்சி மானாமதுரை வழித்தடத்தில் உள்ள, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ராமேஸ்வரம் சென்னை புதுச்சேரி, செகந்திராபாத், வேளாங்கண்ணி அயோத்தியா, ஹூப்ளி . புவனேஸ்வர் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.
காரைக்குடி - மதுரைக்கு
ரயில்:
காரைக்குடி மட்டுமின்றி தேவகோட்டை, பட்டுக்கோட்டை அறந்தாங்கி உட்பட பல்வேறு பகுதியிலிருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் கல்வி, வேலை மருத்துவத்திற்காக சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து தினமும் 80க்கும் மேற்பட்ட பஸ்கள் மதுரைக்கு சென்று வருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடியிருந்து மதுரைக்கு ரயில் வழித்தடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரைக்குடி திருப்புத்தூர் வழியாக மதுரைக்கு 87 கி.மீ., தூரத்தில் புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது. இது சம்பந்தமாக ஆய்வு பணியும் நடந்தது. கார்த்தி எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை கடிதமும் எழுதினார். ஆனால், இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை.
சாமி திராவிட மணி,தொழில் வணிக கழகத் தலைவர்
காரைக்குடி வழியாக மதுரைக்கு தினமும் 3 ஆயிரம் பேர் வரை பஸ்சில் சென்று வருகின்றனர். ரயிலை நம்பி உள்ளவர்கள் மானாமதுரை அல்லது திருச்சி சென்று மதுரை செல்ல வேண்டி உள்ளது. மதுரை ரயில் வழித்தட திட்டத்திற்கு இதுவரை 2 முறை சர்வே பணி நடந்தது. கோட்டையூர், திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி மார்க்கமாகவும்,
காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா, கல்லல் மார்க்கமாகவும் ஆய்வுப்பணி நடந்தது. ஆனால் மலைக்குன்று இருப்பதாக கூறி வழித்தடம் அமைக்க தயங்குகின்றனர். தற்போது நெடுஞ்சாலை பணிக்கு மலைகள் உடைக்கப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலையை ஒட்டி ரயில் வழித்தடமும் அமைக்க வேண்டும்.
ராமநாதன், தலைவர்,
காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் சங்கம்.
காரைக்குடி மதுரை ரயில் தடம் இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள், வியாபாரத்திற்காகவும், மருத்துவத்திற்கும், வேலைக்காகவும், உயர்நீதிமன்றத்திற்கும் மதுரைக்கு சென்று வருகின்றனர். வயதானவர்களும் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்பவர்களும் ரயிலை நம்பியே உள்ளனர். ரயில் பயணிகள் சங்கமும் தொடர்ந்து இது சம்பந்தமாக கோரிக்கை விடுத்து வருகிறது. விரைவில் இத்திட்டத்தை தொடங்க வேண்டும்.