/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
காரைக்குடியில் இன்று ஓட்டு எண்ணிக்கை; ஏஜன்ட்கள் கால்குலேட்டருடன் வர தடை
84 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி
காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் ஓட்டு எண்ணும் பணி இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
கால்குலேட்டருடன் வர தடை
இதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் கீழ் வேட்பாளருக்கு ஒரு ஏஜன்ட் வீதம் இருப்பார்கள். 14 மேஜைகளில் இருந்து வரும் ஓட்டுக்கள் விபரங்களை கணக்கிட வேட்பாளர்களின் ஏஜன்ட்களுக்கு கால்குலேட்டர் கட்டாயம் தேவை.
எண்ணும் போது சர்ச்சை வரலாம்
இதனால், அனைத்து வேட்பாளர்களின் ஏஜன்ட்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திருக்கும் கால்குலேட்டரை நம்பியே காத்திருக்க வேண்டும். இது ஓட்டு எண்ணும் இடத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும், என்றனர்.
தேர்தல் அலுவலரிடம் பெறலாம்
கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி தான் அறிவித்துள்ளோம். உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கால்குலேட்டர்கள் இருக்கும். அதை வேட்பாளரின் ஏஜன்ட்களும் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.