/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் தவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் தவிப்பு
ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் தவிப்பு
ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் தவிப்பு
ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்; அரிசி, சர்க்கரை வாங்க முடியாமல் தவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:34 AM

சிவகங்கை : ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை குறைவாக வழங்கி, விற்பனையாளர் மீது அபராதம் விதிப்பதை கண்டித்து தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், நேற்று சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகினர்.
ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஆதரவாக நேற்று தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.
மாநில அளவில் பெரும்பாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட அளவில் கூட்டுறவு, பாம்கோ, டி.என்.சி.எஸ்.சி., ஸ்டோர்ஸ் மூலம் இயங்கும் 842 ரேஷன் கடைகளில் 567 விற்பனையாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் 663 கடைகள் உள்ளன. இவற்றில் 220 விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றதால், இவர்களின் கீழ் உள்ள முழு, பகுதி நேர ரேஷன் கடைகள் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்தன.
மாத துவக்கத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் திரும்பி சென்றனர். மாவட்ட அளவில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர், கிளார்க் பணிபுரிகின்றனர். மாவட்ட அளவில் 3 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் தவிர்த்து 122 சங்கங்களும் மூடப்பட்டன.
இதனால், கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை அடமானம் வைத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. ஸ்டிரைக்கில் கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த 236 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஒட்டு மொத்தமாக ரேஷன் கடை விற்பனையாளர், கூட்டுறவு வங்கி செயலர், கிளார்க் என மாவட்ட அளவில் 456 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
ஸ்டிரைக்கிற்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் சரவணன், இணை செயலாளர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.