ADDED : ஜூலை 28, 2024 11:47 PM

தேவகோட்டை : தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பட்டுக்குருக்கள் நகரில் 16 அடி உயரத்தில் ஸ்வர்ண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று மாலை ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. முதல் தேய்பிறை அஷ்டமி என்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளை கருப்பு குருக்கள் செய்திருந்தார்.