/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்பாச்சேத்தியில் பஸ்சில் 19 பவுன் நகைகள் திருட்டு திருப்பாச்சேத்தியில் பஸ்சில் 19 பவுன் நகைகள் திருட்டு
திருப்பாச்சேத்தியில் பஸ்சில் 19 பவுன் நகைகள் திருட்டு
திருப்பாச்சேத்தியில் பஸ்சில் 19 பவுன் நகைகள் திருட்டு
திருப்பாச்சேத்தியில் பஸ்சில் 19 பவுன் நகைகள் திருட்டு
ADDED : ஜூலை 28, 2024 11:47 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்திக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் இருந்த கைப்பையில் 19 பவுன் தங்க நகைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ரக்ஷினா 26, கோயம்புத்தூரில் சொந்த தொழில் செய்து வரும் பரமசிவத்தின் மனைவி ரக்ஷினா சொந்த ஊரான மாரநாட்டிற்கு பஸ்சில் திருப்பாச்சேத்தி வந்துள்ளார். அவரது கைப்பையில் தங்க நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். திருப்பாச்சேத்தியில் இறங்கி பார்த்த போது நகைகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.