/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாலத்தில் கிரானைட் கழிவு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு பாலத்தில் கிரானைட் கழிவு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
பாலத்தில் கிரானைட் கழிவு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
பாலத்தில் கிரானைட் கழிவு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
பாலத்தில் கிரானைட் கழிவு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 28, 2024 07:11 AM

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சக்குடி பாலத்தில் சிதறிய கிரானைட் கழிவுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
சிவகங்கை, தொண்டி, காளையார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துாத்துக்குடி, அருப்புக்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பலரும் பூவந்தி, சக்குடி, மணலுார் வழியாக ரிங்ரோடு வழியாக செல்கின்றனர். இதுதவிர சக்குடி, திருமணப்பதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இப்பாதை வழியாக நான்கு வழிச்சாலையில் உள்ள மணலுார் வந்து அங்கிருந்து பஸ்சில் வருகின்றனர்.
நேற்று காலை கிரானைட் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பாலத்தில் செல்லும் போது தடுமாறியதால் கழிவு பாலத்திலேயே சிதறியது.
கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். சுமார் மூன்று அடி உயரத்திற்கு கழிவு சிதறி பாலம் முழுவதும் வெண்மை நிறத்திற்கு மாறியது.
மேலும் கிரானைட் துாசியால் பாலத்தில் யாரும் நடந்து செல்லவே முடியவில்லை. ஆடி மாத காற்று காரணமாக துாசி கிளம்பியதால் டூவீலரில் செல்பவர்கள் பலரும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.