ADDED : ஜூலை 28, 2024 07:09 AM

காரைக்குடி, : காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள வங்கி முன் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாககூறி நேற்று காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமையேற்றார். கார்த்தி எம்.பி., பேசினார்.
மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். காரைக்குடி நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், செயலாளர் குமரேசன், தேவகோட்டை நகரத் தலைவர் சஞ்சய், சிவகங்கை நகரத் தலைவர் விஜயகுமார், காரைக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் அமுதா, ரத்தினம் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேற்று வங்கிகள் விடுமுறை என்பதால் ஆள் நடமாட்டமே இல்லாத நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.