/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கட்டிக்குளம் நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி கட்டிக்குளம் நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி
கட்டிக்குளம் நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி
கட்டிக்குளம் நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி
கட்டிக்குளம் நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி
ADDED : ஜூன் 03, 2024 03:13 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் நுாலகத்திற்கு அருகே கழிவுநீர் தேங்குவதால் வாசகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
இங்கு, ஏராளமான வாசகர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் வந்து செல்கின்றனர். நூலகத்திற்கு பின்னாள் உள்ள குளியல் தொட்டியிலிருந்து வெளியேறும் நீர் அருகிலேயே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுகிறது.
கழிவுநீர் முழுவதும் அருகில் உள்ள தொட்டியில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.