/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோட்டையூர் மின் டிரான்ஸ்பர் சீரமைக்க மக்கள் கோரிக்கை கோட்டையூர் மின் டிரான்ஸ்பர் சீரமைக்க மக்கள் கோரிக்கை
கோட்டையூர் மின் டிரான்ஸ்பர் சீரமைக்க மக்கள் கோரிக்கை
கோட்டையூர் மின் டிரான்ஸ்பர் சீரமைக்க மக்கள் கோரிக்கை
கோட்டையூர் மின் டிரான்ஸ்பர் சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 03:13 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூர் முதல் பள்ளத்துார் வழியாக செல்லும் ரோட்டில் சாய்ந்து விழும் நிலையில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய ரோடு கோட்டையூர், பள்ளத்துார்,கானாடுகாத்தான் வழியாக செல்கிறது.
கோட்டையூரில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள மின்டிரான்ஸ்பார்மர் சேதமான நிலையில் உள்ளது. மேலும் இவை ரோட்டில் சாயும் நிலையில் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். மின்வாரியத்தினர் இந்த மின்டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும்.