/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாசனை நிறைந்த கப் சாம்பிராணிசணல் பை தயாரிக்கும் மகளிர் குழு வாசனை நிறைந்த கப் சாம்பிராணிசணல் பை தயாரிக்கும் மகளிர் குழு
வாசனை நிறைந்த கப் சாம்பிராணிசணல் பை தயாரிக்கும் மகளிர் குழு
வாசனை நிறைந்த கப் சாம்பிராணிசணல் பை தயாரிக்கும் மகளிர் குழு
வாசனை நிறைந்த கப் சாம்பிராணிசணல் பை தயாரிக்கும் மகளிர் குழு
ADDED : ஜூன் 03, 2024 03:14 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே மேலுார் ரோட்டில் பொதிகை நகர் மகளிர் குழுவினர் தயாரிக்கும் கப் சாம்பிராணி, சணலால் தயாரித்த கைப்பை, பர்ஸ், அலைபேசி கவர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
சிவகங்கை, பொதிகை நகரில் செல்வவிநாயகர் மகளிர் குழு செயல்படுகிறது. இதில், 12 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் சொந்தமாக தொழில் செய்து, குழுவிற்கு வருவாய் ஈட்டித்தருவதோடு, குடும்பத்தின் தேவைக்கும் சம்பளமாக பெற்று பொருளாதாரத்தை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது பூஜைகளுக்கு பயன்படுத்தும் கப் சாம்பிராணியில் கரித்துாள், சந்தன பவுடர் உள்ளிட்டவற்றில் ஜவ்வாது பவுடர் உள்ளிட்டவற்றை கலந்து, அச்சு மூலம் கப் சாம்பிராணி தயாரித்து வருகின்றனர்.
அதே போன்று சணல் மூலம் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அலைபேசி கவர், மாணவர்களுக்கான சாப்பாடு பை, கல்வி சான்று வைக்கும் பைல், தாம்பூல பை என ஏராளமான சணல் பை சார்ந்த பைகள் தயாரித்து மகளிர் குழு வளர்ச்சிக்கு உழைத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் செல்வவிநாயகர் மகளிர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இங்கு 12 எண்ணிக்கை உள்ள கப் சாம்பிராணி (கரிதுாளில் தயாரித்த) பாக்கெட் ரூ.50, சந்தன பவுடரில் தயாரித்த சாம்பிராணி பாக்கெட் ரூ.60க்கு விற்கின்றனர்.
சணல் பைகளை பொறுத்து ஒரு பை குறைந்தது ரூ.70 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை விற்கின்றனர்.