/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 03, 2024 03:15 AM

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலைவரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை பணிக்காக ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்க்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் வெறும் பூவரசு மரங்கள் மட்டுமே நடவு செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் மரங்கள் வளரவே இல்லை. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நான்கு வழிச்சாலையிலும் வெயில் அதிகரித்துள்ளது. காலை பத்து மணிக்கே நான்கு வழிச்சாலையில் வெயில் காரணமாக கானல் நீர் தோன்றியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் தவித்து வருகின்றனர்.
சாலையோரம் மரங்கள் இல்லாததால் வெளியூரில் இருந்து நீண்ட துாரம் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடுகளிலும் போதிய நிழல் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.