ADDED : ஜூன் 03, 2024 03:12 AM
திருப்புவனம்: பிரான்மலை அருகே காலடி பச்சேரி அரியலிங்கம் நேற்று மடப்புரம் பத்ரகாளி கோயிலில் கிடா வெட்டு நேர்த்தி செலுத்த வந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு அவரது உறவினரான ராஜ்குமார், அவரது மனைவி சங்கீதபிரியா, மகள் வர்ஷா 8, ஆகியோர் மடப்புரம் வந்திருந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, மின்கம்பத்திற்காக நடப்பட்டிருக்கும் இழுவை கம்பியை பிடித்து விளையாடிய போது , மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.