ADDED : மார் 14, 2025 07:28 AM
சிவகங்கை, மார்ச் 14-சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.
கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், டாக்டர் சசிக்குமார், நகராட்சி தலைவர் துரை ஆனந்த் சிறப்புரை ஆற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கூடுதல் எஸ்.பி., சான்றிதழை வழங்கினார். மாணவி வினோதினி நன்றி கூறினார். //