ADDED : மார் 14, 2025 07:28 AM
தேவகோட்டை: தேவகோட்டை 16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா, மகளிர் தின விழா, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா வட்டார கல்வி அலுவலர் சூர்யா தலைமையில் நடந்தது. வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் ராமராஜன் வரவேற்றார். தலைமை ஆசிரியை வணக்கமேரி அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் , துணை தலைவர் ரமேஷ் பரிசுகள் வழங்கினர்.
* 10 வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை தமிழ்மணி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் சூர்யா துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் சுதா, ரெத்தினம், ஆசிரியர் பயிற்றுநர் பேச்சியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்வீன் பானு பங்கேற்றனர்.