ADDED : மார் 14, 2025 07:27 AM

படம் உண்டு சிவகங்கை, மார்ச் 14-உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் உட்பட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஊரக வளர்ச்சி துறையினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். காலியாக உள்ள ஊராட்சி செயலர், டிரைவர், பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் உட்பட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சி முகமை, வளர்ச்சி பிரிவு, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர், உதவியாளர், அலுவலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பல்வேறு அலுவலகங்களில் 798 பேர் இருக்க வேண்டிய இடத்தில், 595 பேர் பணிபுரிந்தனர். 212 பேர் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில் 383 பேர் பணிக்கு வந்தனர். ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.