/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றம் பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றம்
பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றம்
பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றம்
பிள்ளைவயல் காளி கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றம்
ADDED : ஜூன் 20, 2024 04:50 AM
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஜூலை 5 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 12ல் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.
சிவகங்கை நகரில் ஆண்டுதோறும் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி காலை கொடியேற்றம், மாலை காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்குகிறது. தினமும் பிள்ளைவயல் காளியம்மன் பல்வேறு அலங்காரங்களில் மாலையில் எழுந்தருள்வார். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா ஜூலை 12 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறும். அன்றைய தினம் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். இரவு கலைநிகழ்ச்சி நடைபெறும்.
ஜூலை 12 அன்றுகாலையில் இருந்து இரவு முழுவதும் பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி, ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வருவார்கள்.
அங்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்தி செலுத்துவர். விழா ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
ரோட்டில் புற்றீசல் கடைக்கு தடை
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கோயில் வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் பூக்கடை, தேங்காய் பழ கடை, வாகன நுழைவு கட்டண வசூல் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
அந்த இடங்கள் மட்டுமின்றி கோயிலுக்கு செல்லும் நுழைவு பகுதியான பிள்ளைவயல் ஆர்ச் முதல் கோயில் வரை ரோட்டின் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டோர கடைகள் புற்றீசல் போல் காணப்படும்.
இதற்கு போலீசார் நிரந்தர தடை விதித்தால் மட்டுமே, கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவதில் எந்தவித இடையூறும் ஏற்படாது. கூட்ட நெரிசலில் நகை பறிப்பு சம்பவங்களும் தவிர்க்கப்படும். ரோட்டோரம் கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.