/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டதேவி கோயிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு கண்டதேவி கோயிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு
கண்டதேவி கோயிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு
கண்டதேவி கோயிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு
கண்டதேவி கோயிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு
ADDED : ஜூன் 20, 2024 04:52 AM

தேவகோட்டை: சிவகங்கை சமஸ்தானத்தின் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் இரவு சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேரோட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களை தவிர வேறு நபர்கள் உள்ளே நுழைந்து விடாமல் தடுக்க கோவிலை சுற்றி 2 கி.மீ. தூரத்திற்கு இருபுறங்களிலும் இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.