/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தபால் நிலையத்தில் ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தபால் நிலையத்தில் ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தபால் நிலையத்தில் ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தபால் நிலையத்தில் ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
தபால் நிலையத்தில் ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்திற்கு விபத்து காப்பீடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ADDED : ஜூன் 20, 2024 04:50 AM
சிவகங்கை: தபால் நிலையங்களில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடாக ரூ.10 லட்சம் வரை பெறலாம் என சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
காரைக்குடி கோட்டத்தில் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலம் வயது 18 முதல் 65 க்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி, ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு மற்றும் ரூ.750 செலுத்தி ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறும் வசதி தபால் துறை மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அனைத்து வகை பணி செய்பவர்களுக்கு இந்த விபத்து காப்பீடு பெற்று பயன் பெறலாம்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மொத்தமாகவும் காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகங்களிலேயே முகாம் அமைத்து விபத்து காப்பீடு வசதி செய்யப்படும்.
விண்ணப்ப படிவங்கள், அடையாள முகவரி சான்று நகல்கள் போன்று எந்தவித ஆவண நகலின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு இயந்திரம் மூலம் இந்த பாலிசியில் சேரலாம். ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மூலம் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினமும் ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினர் பயண செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். இக்காப்பீடு தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 20, 21ல் சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.