ADDED : ஜூன் 06, 2024 05:50 AM

தேவகோட்டை : தேவகோட்டையில் பல பகுதிகளில் நகராட்சிசார்பில் புதிதாக ரோடுகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் சேதமடைந்த ரோடுகளுக்கு விமோசனம் இல்லை.
குறிப்பாக நகர் பகுதியில் இருந்து வெள்ளையன் ஊரணி வழியே ஷீரடி சாய்பாபா கோவில் செல்லும் வீதியில் சமீபத்தில் போடப்பட்ட பேவர் பிளாக் பதிக்கப்பட்ட ரோடு மிகவும் மோசமாக உள்ளது.
அந்த வீதியில் உள்ள நடுநிலைப் பள்ளி வாசல் அருகில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. கார்கள் வந்தால் சைக்கிள்களில் வருவோர், நடந்து வருவோர் ஒதுங்க கூட முடியாது.
நகராட்சி பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட வீதியை பார்வையிட்டு சேதமடைந்த கற்களை எடுத்துவிட்டு புதிய கற்களை சீராக அடுக்கினாலே போதும், ரோடு சீராகி விடும்.