/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதிய ரோடு அமைத்து தர 3 கிராம மக்கள் கோரிக்கை புதிய ரோடு அமைத்து தர 3 கிராம மக்கள் கோரிக்கை
புதிய ரோடு அமைத்து தர 3 கிராம மக்கள் கோரிக்கை
புதிய ரோடு அமைத்து தர 3 கிராம மக்கள் கோரிக்கை
புதிய ரோடு அமைத்து தர 3 கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2024 05:50 AM
சிவகங்கை : அலவாக்கோட்டை அருகே பெரிய அம்மச்சிபட்டி கிராமத்திற்கு புதிய ரோடு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
அலவாக்கோட்டை அருகே உள்ளது பெரியஅம்மச்சிபட்டி, மேல அம்மச்சிபட்டி, கீழ அம்மச்சிபட்டி கிராமங்கள். இந்த 3 கிராமத்திலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்குசெல்லக்கூடிய ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக்காலங்களில் கிராமத்தில் உள்ளவர்கள் பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள அலவாக்கோட்டை கிராமத்திற்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.
தங்கள் பகுதிக்கு புதிதாக ரோடு அமைத்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்