ADDED : ஜூன் 06, 2024 05:49 AM

சிங்கம்புணரி, : எஸ்.புதுார் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.நெடுவயல் ஊராட்சி பி.அய்யாபட்டியில் ஆதீனமிளகி ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. நேற்று காலை ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டை துவக்கினர். அனைத்து காளைகளுக்கும் வேட்டி அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. முதலில் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக வி.ஏ.ஓ., அளித்த புகாரில் பி.அய்யாபட்டியைச் சேர்ந்த துரைராஜ், முத்துச்சாமி, முத்துக்கருப்பன், வள்ளியப்பன், பழனியப்பன் ஆகியோர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.