/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை திருப்புத்துாரில் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
திருப்புத்துாரில் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
திருப்புத்துாரில் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
திருப்புத்துாரில் ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2024 05:51 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் பிரபாகர் காலனி, நாகராஜன் நகர் பகுதியிலிருந்து ரோட்டை தென்மாப்பட்டு, நான்குவழிச்சாலை செல்லும் ரோட்டிற்கு நீட்டித்து முழுமையான தார் ரோடாக மாற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் பெரிய கண்மாயிலிருந்து நீர்வரத்து கால்வாய் தென்மாப்பட்டு கண்மாய்க்கு செல்கிறது.
இந்த வரத்துக்கால்வாய் செல்லும் வழியில் சிவகங்கை ரோட்டிலிருந்து விலக்கு ரோடாக தார் ரோடு பிரிகிறது. பிரபாகர்காலனி, நாகராஜன் நகர் வழியாக செல்லும் இந்த தார் ரோடு முடிவில் பேவர்பிளாக் ரோடு ஆக மாறுகிறது. நாகராஜன் நகர் அருகில் பேவர் பிளாக் ரோடும் முடிகிறது.
தொடர்ந்து தென்மாப்பட்டு கண்மாய் கரையாக மண் ரோடு செல்கிறது. இந்த ரோடு தென்மாப்பட்டு அக்கசாலை விநாயகர் கோயில் சாலையை சந்திக்கிறது. தொடர்ச்சியாக நான்கு வழிச்சாலையை தொடுகிறது.
உள்ளூர் போக்குவரத்திற்கு உதவும் இந்த ரோட்டை முழுமையாக தார்ச்சாலையாக மாற்ற இப்பகுதியினர் கோரியுள்ளனர். மேலும் நான்கு வழிச்சாலையிலிருந்து இந்த ரோட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்கவும் கோரியுள்ளனர்.
இதன் மூலம் வரத்துக்கால்வாய் பராமரிப்பிற்கான சர்வீஸ் ரோடாக அமைவதுடன் ஆக்கிரமிப்பிலிருந்து கால்வாயும் பாதுகாக்கப்படும். தற்போது இப்பகுதியில் குடியிருப்பு வளர்ந்து வருவதால் இப்பகுதியினர் வாகனப்போக்குவரத்திற்கு இந்த புதிய ரோடு உதவும்.