/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பச்சை மையில் கையெழுத்திட ஊராட்சி தலைவர்களுக்கு உரிமை இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பச்சை மையில் கையெழுத்திட ஊராட்சி தலைவர்களுக்கு உரிமை இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
பச்சை மையில் கையெழுத்திட ஊராட்சி தலைவர்களுக்கு உரிமை இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
பச்சை மையில் கையெழுத்திட ஊராட்சி தலைவர்களுக்கு உரிமை இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
பச்சை மையில் கையெழுத்திட ஊராட்சி தலைவர்களுக்கு உரிமை இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
ADDED : ஜூலை 12, 2024 02:32 AM

திருப்புவனம்:தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஆயிரத்து 618 கிராமப்புற ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகின்றனர். ஊராட்சி தலைவர்கள் பலரும் அரசுக்கு அனுப்பும் கோரிக்கை மனுக்கள், காசோலை, மக்கள் தரும் மனுக்கள், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட பலவற்றிலும் பச்சை மையில் கையெழுத்திடுகின்றனர்.
திருப்புவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவர்கள் பச்சை மையில் கையெழுத்திட அதிகாரம் உண்டா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் ஊராட்சி தலைவர்கள் பச்சை மை பேனாவை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
கார்த்திகேயன் கூறியது தாசில்தார், கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மட்டுமே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் பெற்றவர்கள். ஊராட்சி தலைவர்கள் பயன்படுத்துவது சரியல்ல. எனவே தமிழக அரசு ஊராட்சி தலைவர்கள் பச்சை மை பேனாவால் கையெழுத்து இடுவதை தடை செய்ய வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.