/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல் விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்
விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்
விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்
விருப்ப மாறுதல் விண்ணப்ப பதிவேற்றம் 'சர்வர்' பிரச்னையால் சிக்கல்
ADDED : ஜூலை 12, 2024 02:28 AM

சிவகங்கை:'சர்வர்' பிரச்னை உள்ளதால் பணியாளர்கள் விருப்ப மாறுதல் விண்ணப்பங்களை எமிஸ்இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க மாநிலஅமைப்பு செயலாளர் எம்.என்.கந்தசாமி கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவின்படி தமிழக பொதுப்பணி, அமைச்சுப் பணி, அனைத்து வகை பணியாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மாறுதல் வழங்க விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
ஆனால் சர்வர் பிரச்னை இருப்பதால் சிரமப்படுகின்றனர். இதற்கு ஜூலை 10 முதல் நேற்று மாலை 6:00 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். கூடுதல் கால அவகாசம் தேவை.
உடல்நிலை பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவச் சான்று இணைத்தால் ஏற்கனவே பணிபுரிந்த இடத்திலேயே பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.