/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 'மக்களுடன் முதல்வர்' திட்டம் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம்
ADDED : ஜூலை 12, 2024 04:25 AM

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் 64 பயனாளிக்கு ரூ.70.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சோழபுரம், காஞ்சிரங்கால், நாலுகோட்டை ஆகிய 3 ஊராட்சி பகுதி மக்களுக்காக நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத், கோட்டாட்சியர் விஜயக்குமார், தாசில்தார் சிவராமன் பங்கேற்றனர்.
முகாமில் மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்களிடம் 220 மனுக்கள் வரை பெறப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர். பல்வேறு துறைகளின் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.70.84 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.