/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வயிரவன்பட்டியில் ஜூலை 29ல் மகா உற்ஸவம் வயிரவன்பட்டியில் ஜூலை 29ல் மகா உற்ஸவம்
வயிரவன்பட்டியில் ஜூலை 29ல் மகா உற்ஸவம்
வயிரவன்பட்டியில் ஜூலை 29ல் மகா உற்ஸவம்
வயிரவன்பட்டியில் ஜூலை 29ல் மகா உற்ஸவம்
ADDED : ஜூலை 25, 2024 11:55 PM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே என்.வயிரவன்பட்டி வயிரவர் கோயிலில், ஜூலை 29ல் மகா உற்ஸவம் துவங்குகிறது.
இக்கோயிலில் ஆடி மகா உற்ஸவம், தேரோட்டத்துடன் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 29 அதிகாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், மாலை 4:45 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கி, காப்புக் கட்டி உற்ஸவம் துவங்கும்.
தினசரி காலை 8:30 மணிக்கு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வயிரவர் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.7ம் நாள் ஒன்பதாம் நாள் விழாவில் மாலையில் தேரோட்டமும், மறுநாள் பத்தாம் நாள் விழாவில் காலையில் அனைத்து சுவாமிகளுக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும்.
பதினோராம் நாள் விழாவன்று காலையில் பஞ்ச மூர்த்திகள் வயிரவ சுவாமிக்கு மஹாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணம், இரவில் பஞ்சமூர்த்திகளுடன் வயிரவர் திருவீதி உலா நடைபெறும்.