ADDED : ஜூலை 25, 2024 11:55 PM

காரைக்குடி: காரைக்குடி கலாம் நற்பணி மன்றம் சார்பில்அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அப்துல் கலாமின் நினைவு தினம் ஜூலை 27ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி ஆண்டுதோறும் காரைக்குடியில் இருந்து அப்துல் கலாம் நினைவிடம் வரை கலாம் நற்பணி மன்றம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடத்தப்படுகிறது.
நேற்று காலை, 9வது ஆண்டு சைக்கிள் பயணம்காரைக்குடி அழகப்பா பல்கலையிலிருந்து தொடங்கியது. சமூக ஆர்வலர்கள் சீனி முகமது, முகமது கனி ராஜ்கபூர் ஆகியோர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
பயணத்தை டாக்டர். பிரபு, குளோபல் மருத்துவமனை டாக்டர் குமரேசன், அரசு பொது மருத்துவர் கார்த்திகேயன், மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.