ADDED : ஜூன் 25, 2024 11:13 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் மருதுபாண்டியர் நகர் மேல் நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் பானுமதி வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் து.நடராஜன் தலைமை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பேசினார்.
குற்றவியல் நீதித்துறை நடுவர் அனிதா கிருஸ்டி போக்சோ சட்டத்தின் மூலம் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் குறித்து பேசினார்.
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி செல்வம் தழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு நடைபெறும் வன் கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் சார்பாக பேசினார்.
கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம் 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்று பேசினார்.
டி.எஸ்.பி., பிருந்தா போக்சோ சட்டத்தை நிறைவேற்றுவதில் காவல்துறையின் பங்கு குறித்து பேசினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009யை பற்றி பேசினார்.