ADDED : ஜூன் 24, 2024 11:57 PM
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே குறிஞ்சி நகர் பகுதியில் திருட்டு மணலுடன்வந்த டிராக்டரை போலீசார் கைப்பற்றி இருவரை கைதுசெய்தனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மணல் திருட்டு சம்பந்தமாக போலீசாரின்சிறப்பு ரோந்து நடைபெற்றது.
திருக்கோஷ்டியூர் போலீசார் குறிஞ்சி நகர் பகுதியில் திருட்டு மணலுடன் வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். காரையூர் குமார்40, டிரைவர் கல்லல் சரத்குமார்29 ஆகியோரைகைது செய்தனர். விசாரணையில் காரையூர் பகுதியில் அனுமதியின்றி அள்ளப்பட்ட மணல் என்பது தெரியவந்தது.